மஹாலய ச்ராத்த நிரூபணம்

மஹாலய ச்ராத்த நிரூபணம்:
ஸ்ம்ருதி முக்தா பலம்:

வ்ருத்த மனு:
பாத்ரபத மாஸத்தின் கிருஷ்ண பக்ஷம், சூரியன் கன்னியில் இருக்கும்பொழுது அது ‘மஹாலயம்‘ எனப்படும். அவ்விதம் ‘கஜச்சாயா‘ என்றும் சொல்லப்படும்.

மார்கண்டேயர்:
சூரியன் கன்யா ராசியை அடைந்திருக்கும் பொழுது பார்வண விதமாக ச்ராத்தம் விதிக்கப்படுகிறது.
ப்ரதமை தன லாபத்தை கொடுக்கும், த்விதீயை ப்ரஜையை கொடுக்கும், த்ருதீயை இஷ்டமான வரனை கொடுக்கும், சதுர்த்தி சத்ருக்களை அகற்றும், பஞ்சமியில் செய்பவன் சம்பத்தை அடைவான், ஷஷ்டியில் செய்பவன் புகழத் தகுந்தவனாவான், சப்தமியில் கூட்டத்திற்க்குத் தலைவனாவான், அஷ்டமியில் சிறந்த புத்தியை அடைவான், நவமியில் நல்ல ஸ்த்ரீயை மனைவியாக அடைவான், தசமியில் இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான், ஏகாதசியில் ஶ்ராத்தம் செய்பவன் வேதங்களின் அறிவை பெருவான், த்வாதசியில் பித்ருக்களை பூஜிப்பவன் ஸ்வர்ண லாபத்தை அடைவான், த்ரயோதசியில் ஶராத்தம் செய்பவன் ப்ரஜை, தேஹபுஷ்டி, புத்தி, பசுக்கள், ஸ்வதந்த்ரத்தன்மை, சிறந்த வ்ருத்தி, தீர்க்கமான ஆயுள், ஐஸ்வர்யம் இவைகளை அடைவான், எவனுடைய பித்ருக்கள் ஆயுதத்தால் அடிக்கப்பட்டு இறந்தார்களோ, அவன் அவர்களுக்கு நன்மையை விரும்பி சதுர்தசியில் ஶ்ராத்தத்தை செய்யவும். அமாவாஸ்யையில் சுத்தனாய் அன்ன ஸ்ராத்தம் செய்பவன் இஷ்டங்கள் எல்லாவற்றையும் ஸ்வர்க்கத்தையும் அடைவான்.

 

FOR BOOKINGS CLICK THE LINK BELOW:

MAHALAYA SHRADDHAM

Leave a Reply

Related Posts